இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது தாக்குதல்

Date:

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் களனி, சரச்சந்திர டயஸ் மாவத்தை, கோனவில, பமுனுவிலவில் அமைந்துள்ள இல்லத்தின் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலினால் இரண்டு மாடி இல்லத்தின் எட்டு ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலின் போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....