இத்தாலியில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம்..!

Date:

இத்தாலியில் ஊதிய உயர்வு , ஒப்பந்தம் நீட்டிப்பு போன்றவற்றை வலியுறுத்தி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் கூடும் ரோம், வெனிஸ் போன்ற நகரங்களில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்களும் சோகத்தில் உள்ளனர். ரோம் நகரில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட விமானங்களும் மிலன் நகரில் 150-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

இதுகுறித்து அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறும்போது, விமான நிலைய பணியாளர்கள் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், மக்களையும் சிரமப்படுத்தாமல் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....