குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

Date:

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா அதிகபட்சமாக 57 ஓட்டங்களை பெற்றதுடன் தினேஷ் சந்திமல் 34 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Abrar Ahmed 4 விக்கெட்டுக்களையும் Naseem Shah 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....