குடி போதையில் தன் குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய தந்தை

Date:

தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் தந்தையொருவர் தனது மூன்று வயது குழந்தையின் உடலில் வெந்நீரை ஊற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்.

 

இந்த சம்பவம் தொடர்பில் இன்று முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

நேற்று (24) மாலை சிறு குழந்தை இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதுடன், குடிபோதையில் இருந்த தந்தை, குழந்தையை கொடூரமாக தாக்கி, உடலில் வெந்நீரை ஊற்றியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தையின் தந்தை நுவரெலியா பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

குறித்த குழந்தையின் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட சிகிச்சையின் பின்னர் விசேட வைத்திய நிபுனர் ஒருவரின் கீழ் மேலதிய சிகிச்சைக்காக நுவரேலியா தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படும் எனவும் லிந்துலை பிராந்திய வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி ஏ. ஜெயராஜன் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....