விபத்தில் சிக்கிய இளைஞர் பலி

Date:

காலி கொழும்பு வீதியில் கடந்த 6ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற போது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதான இளைஞர் ஒருவர் நேற்று (13) உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை மோதரவில வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த மிஹில் தேஷாஞ்சன பெரேரா என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் மேலும் பலருடன் இணைந்து கடந்த 6 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில்  2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 முச்சக்கரவண்டிகளில் காலி கொழும்பு வீதியில் களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி உல்லாசமாக சென்றுள்ளனர்.

இதன்போது நல்லுருவ சந்தியில் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட்டிருந்த துாணில் அவர் சென்ற  மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அவர்களுடன் மேலும் ஒரு மோட்டார் சைக்களில் சென்ற ஒருவர் தமது கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....