# Tags

இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விடவும் இன்று வலுவாகியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் கொள்வனவு பெறுமதி 331 ரூபா 71 சதமாக காணப்பட்டதுடன், அதன் இன்றைய பெறுமதி 316 ரூபா 84 சதமாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி நேற்றைய தினம் 349 ரூபா […]

மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

உலக சந்தையில் இன்று (17) மசகு எண்ணெயின் விலை 70 அமெரிக்க டொலர் என்ற எல்லையை எட்டியுள்ளது.   WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 68.82 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.   இதேவேளை, பிரென்ட் (Brent) சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 75.16 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின்படி இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.06 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 351.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 84 சதமாகவும், விற்பனை பெறுமதி 335 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை வந்தடைந்த சொகுசு கப்பல்

1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிச் வந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன் அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர். அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் […]

இலங்கை ரூபா குறித்து எச்சரிக்கை !

அமெரிக்க டாலருக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் வலுவடைந்து வரும் ரூபாயின் மதிப்பு, இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு 23% குறையும் என்று Fitch Solutions மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது. Fitch Financial Solutions இன் இடர் ஆய்வாளர் செவாங் டின் கூறுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் தொகைக்கு இலங்கை அதன் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலைப் பெற்றாலும், நிதி திட்டத்திற்கு இணங்குவது கடினமான சவாலாக இருக்கும். […]