# Tags

விபத்தில் சிக்கிய அம்பாறை மாவட்ட முன்னாள் எம்.பி

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவர், பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்ற பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.. இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கடற்கரையில் மிதிவெடி மீட்பு!

கடற்கரை மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸார், இன்று (14) காலை கடற்கரைப்பகுதில் கண்டெடுக்கப்பட்ட குறித்த மிதிவெடி பழையதா அல்லது வேறு இடம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளதா என்ற விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த மிதிவெடி மீட்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை சூட்சுமமாக கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்து 51 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர் கைதானார். கைதான சந்தேக நபர் வசமிருந்து 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக […]