# Tags

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் இதுவரை 3 இலட்சத்து 30,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் 21ஆம் திகதி வரை 84,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக குறித்த அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார். ஜனவரியில் ஒரு இலட்சத்து 2,545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் 107,639 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் ரஷ்யா, இந்தியா, பிரித்தானியா, ஜேர்மனி, […]

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் !

அவுஸ்திரேலியாவின் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் வெறுமனே பார்வையிடுவதற்கான காட்சிப்பொருட்களாக என சீன அதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி திட்டம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சீனஅதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். சர்வதேச பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்ட சந்திப்பின் போது சீன பிரதிநிதி இவ்வாறு கேள்விஎழுப்பியுள்ளார். இந்த அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிதிட்டம் சர்வதேச அணுவாயுதபரவல் உடன்படிக்கைக்கு மாறானது என்ற சீனாவின் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே சீன பிரதிநிதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த படகுகள் […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி நாளை தகுதி பெறுமா? ; இலங்கை அணி கையில் இந்திய அணியின் கனவு

அவுஸ்திரேலியா – இந்தியா இடையேயான போர்டர் கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ள நிலையில் 4வது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடி வரும் இந்தியா சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் இதுவரை 5 விக்கெட் இழப்புக்கு 501ரன்கள் […]

ஸ்டெபி கிராப்பின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியனான பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கிறார்கள். துபாய் ஓபன் டென்னிசில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து மகுடம் சூடிய செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா 14 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் […]

3ஆவது டெஸ்ட்: அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி !

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 109 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்ததோடு, அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 197 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனையடுத்து, 88 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸூம்163 ஓட்டங்களுக்குள் நிறைவுக்கு வந்தது. 45 வருடங்களுக்கு பின்னர் இந்திய அணி இரு இன்னிங்ஸூகளிலும் 200 ஓட்டங்களுக்கு குறைவாக […]

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல் : தமிழ்நாட்டை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அப்ரன் பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நேற்று (28) வந்த நபர் ரயில் நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த துய்மைப்பணியாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த தகவலை அறிந்த பொலிஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த நபர் பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். இதையடுத்து, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு […]