# Tags

இலங்கையில் காற்றின் தரம் குறைவு !

கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு சற்று அதிகரித்துள்ளது. கொழும்பு நகரின் வளி மாசடைவு தொடர்பான காற்று தரச்சுட்டெண் இன்று முற்பகல் 11.30 வரை 135 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் 128 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் 130 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. பத்தரமுல்லையில் 121 காற்று தரச்சுட்டெண் 121 புள்ளிகளாக பதிவானது. பொதுவாக 101 முதல் 150 என்ற காற்று தரச்சுட்டெண் அளவானது நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக உணர்திறன் கொண்ட தரப்பினருக்கும் ஆரோக்கியமற்றதாகும்.

இலங்கையில் புதிய திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய இராச்சியம்!

ஐக்கிய இராச்சியமானது இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 92% வீதமான தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்தது தங்கத்தின் விலை !

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (13) காலை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 160,000 ரூபா விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை (09) கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 134,000 ஆக குறைந்தது. இதேவேளை, கடந்த வியாழக்கிழமை 24 கரட் தங்கம் ஒரு பவுன் […]

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசம் தொடர்பில் நடவடிக்கை !

பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் பிரவேசித்தமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று(09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரவேசித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். களனி மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற […]

அதிரடியாக சரிந்தது தங்கத்தின் விலை!

இந்த நாட்டில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்துள்ளது. இன்று (09) காலை கொழும்பு ஹெட்டி வீதி தங்கச் சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கெரட் தங்கம் ஒரு பவுன் விலை 134,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இம்மாத ஆரம்பத்தில் கொழும்பு ஹெட்டி வீதி தங்கச் சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 184,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கம் ஒரு பவுன் விலை 170,000 […]

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் முறியடிப்பு !

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்த பேரணியை கலைப்பதற்கு பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

தும்முல்ல சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்தவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் […]

கொழும்பின் சில பகுதிகளில் மார்ச் 04 ஆம் திகதி 24 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (04) மாலை 02 மணி முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு 01 முதல் 04 வரையும், கொழும்பு 07 முதல் 11 வரையுமான பகுதிகளில் கடுவலை, கொலன்னாவை நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் வெல்லம்பிட்டிய மற்றும் கொட்டிகாவத்தையிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மாளிகாகந்த நீர்த்தாங்கிக்கான நீர் விநியோகக் கட்டமைப்பு புனரமைக்கப்படவுள்ளதால், நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

  • 1
  • 2