# Tags

இலங்கைக்கு முதல் கட்டமாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்

நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு உதவியளிக்க சர்வதேச நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் அளித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெறவுள்ளது. இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை பெறும். 48 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன்வசதியின் கீழ் இலங்கைக்கு குறித்த தொகை வழங்கப்படும். இந்த மாத […]

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் !

அவுஸ்திரேலியாவின் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் வெறுமனே பார்வையிடுவதற்கான காட்சிப்பொருட்களாக என சீன அதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி திட்டம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சீனஅதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். சர்வதேச பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்ட சந்திப்பின் போது சீன பிரதிநிதி இவ்வாறு கேள்விஎழுப்பியுள்ளார். இந்த அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிதிட்டம் சர்வதேச அணுவாயுதபரவல் உடன்படிக்கைக்கு மாறானது என்ற சீனாவின் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே சீன பிரதிநிதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த படகுகள் […]

தாய்ப்பால் கொடுக்க கற்றுக் கொடுக்கும் கணவன்

மனைவிக்கு தாய்ப்பால் கொடுக்க கற்றுக் கொடுக்கும் கணவன்: மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட மனைவி

சீனாவில் ஆண் ஒருவர், மனைவிக்கு எப்படி சரியாக தாய்ப்பால் கொடுப்பது என்று கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தாய்ப்பால் தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த பெயர் தெரியாத தந்தை ஒருவர், மனைவி தனது ஒரு மாத குழந்தையை தவறாக பிடித்து வைத்திருப்பதை உணர்ந்து அவருக்கு எப்படி சரியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார். அவர்களது வீட்டில் உள்ள லவுஞ்ச் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கும் கணவர், குழந்தையை […]

தாய்வானை இணைக்க சீனா அழுத்தம் தரும் - அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!

தாய்வான் நாட்டை இணைக்க சீனா அழுத்தம் தரும் – அமெரிக்கா உளவுத்துறை அறிக்கை..!

தாய்வான் நாட்டை தன்னுடன் இணைக்க சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இடைவெளியை அதிகரிக்கும் என்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் என்றும் அமெரிக்க உளவுத் துறையின் வருடாந்திர அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளின் கடல் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சீனா உரிமை கோரி அரசு இயந்திரத்தையும் அதிகாரத்தையும் முழுவதுமாகப் பயன்படுத்தி வருகிறது என்றும் தாய்வானின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றும் அந்த […]

உக்ரைன்-ரஷ்யா போர் : சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும், உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்கிடையே சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகவும், அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது குறித்து தெரிவித்த அவர், […]

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதி

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் […]

COVID-19 தொற்றின் பின்னர் நாட்டை வந்தடைந்த முதலாவது சீன சுற்றுலா பயணிகள் குழு

COVID-19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதல்தடவையாக சீனச் சுற்றுலாப் பயணிகள் சிலரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விமானமொன்று நேற்றிரவு(01) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த சுற்றுலாப் பயணிகள் சீனாவின் Quanzhou நகரிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட தரப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.

பேரழிவை ஏற்படுத்திய கொரோனா எங்கிருந்து உருவானது? : அமெரிக்கா வெளியிட்ட முக்கிய தகவல்

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கிருந்து உலகெங்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. 3 ஆண்டுகளை கடந்தும் இந்த உயிர்க்கொல்லி தொற்று எங்கிருந்து உருவானது என்பதில் தொடர்ந்து குழப்பமே நீடித்து வருகின்றது. இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் உருவானது என பரவலாக குற்றம் சாட்டப்பட்டாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து அமெரிக்க மின்சக்தி அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில் ,’சீனாவின் உகானில் உள்ள […]

சீனாவின் பதிலுக்கு அமையவே IMF கடன் வசதியை பெற முடியும் – நிதி அமைச்சு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து(IMF) கிடைக்கும் கடன் வசதி, சீனாவின் பதிலிலே தங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் சீனா சாதகமாக பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீனாவுடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனைத்து ஆவணங்களும் தயார் நிலையிலுள்ளதாகவும் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டிய கடன் சான்றிதழ் கிடைத்தவுடன், சர்வதேச நாணய நிதியத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நிதி அமைச்சு […]