# Tags

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது !

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் பணம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 700 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் […]

தமிழரசு கட்சியின் செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். இதன்போது குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் இரா.சாணக்கியன் […]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும்மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் […]