# Tags

துருக்கி நிலநடுக்கங்களால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் – உலக வங்கி

கடந்த 06ஆம் திகதி துருக்கியில் பதிவான இரு பாரிய நிலநடுக்கங்களினால் 34.2 பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மொத்த புனரமைப்பு பணிகளுக்காக செலவாகும் நிதி, இதனை விடவும் இரு மடங்காக அதிகரிக்கலாமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலைமை “உண்மையில் பேரழிவு” என ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் Anna Bjerde தெரிவித்துள்ளார். நிலநடுக்கங்களினால் துருக்கியில் பதிவாகியுள்ள சேத மதிப்பீடு 34.2 […]

துருக்கி-சிரியா நிலநடுக்க பேரழிவு : கட்டிட ஒப்பந்ததாரர்கள் 184 பேர் கைது – 600 பேரிடம் விசாரணை

துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ம் திகதி ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியிலும், அதன் அண்டை நாடான சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியது. இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் மட்டும் 44 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதிகப்படியான உயிர் சேதத்துக்கு மோசமான கட்டுமானமே காரணம் என துருக்கியை சேர்ந்த கட்டிடவியல் நிபுணர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். அந்த நாட்டின் கட்டுமான […]