# Tags

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது !

முல்லைத்தீவு அலம்பில் கடற்பகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 16) இரவு இலகுரக மீன்பிடியில் ஈடுபட்ட இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இரண்டு டிங்கி படகுகள் மற்றும் அனுமதியற்ற மீன்பிடி சாதனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். SLNS கோட்டாபயவின் கடற்படைப் பிரிவு நாயாறு மற்றும் உதவி மீன்பிடி பணிப்பாளர் அலுவலகம் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமிகள் மாயம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசித்ததாகவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் […]

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது !

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் பணம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 700 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும்மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் […]