பொலிஸ் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்
பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சரணடைந்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சகோதரரான பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார். கடந்த வாரம், யாழ். தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பகுதியில் கொடிகாமம் பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. இதன்போது, அதைக் கொண்டு வந்தவர் தப்பிச் சென்றிருந்தார். சில தினங்களில் பின்னர் குறித்த நபர் […]