# Tags

இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்யர்கள்!

மார்ச் மாதம் முதல் 13 நாட்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மார்ச் மாதத்தின் முதல் 13 நாட்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ள நிலையில் 12,762 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,289 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து […]

அமெரிக்க விமானத்துடன் மோதிய ரஷ்ய போர் விமானம்

கருங்கடலுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றுடன் ரஷ்ய போர் விமானமொன்று மோதியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான நேரடி மோதல் தோற்றம் பெறுவதற்கான அச்சுறுத்தலை இந்தச் சம்பவம் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச வான் பரப்பில் வழமையான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இரு ரஷ்ய போர் விமானங்கள் அதனை இடைமறிக்க முற்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சூழ்ச்சியொன்றின் மூலமே குறித்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதாக கூறும் ரஷ்யா, […]

உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி போர் தொடுத்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகின்றது. இதனால் உலகளவில் பொருளாதாரத்திலும், விநியோகத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனாலும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உக்ரைனில் பல பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் டஜன் கணக்கிலான கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாகின. 11 பேர் கொல்லப்பட்டனர். ஏவுகணை மழை அதன்பிறகு நேற்று அதிகாலை நேரத்தில் உக்ரைனின் மின்சக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து […]

இலங்கையில் அணுமின் நிலையங்களை அமைக்கும் ரஷ்யாவின் முன்மொழிவை பரிசீலிக்க தீர்மானம்

இலங்கையில் அணுமின் நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான முன்மொழிவுடன் கூடிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை ரஷ்யா முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டம் என இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் S.R.D. ரோஸா கூறியுள்ளார். அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நடவடிக்கை குழுவொன்றையும், 9 செயற்பாட்டுக் குழுக்களையும் நியமிக்க அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானித்தது. அணு மின் நிலையத்தை நிலப்பரப்பில் அமைப்பதா அல்லது கப்பலில் பொருத்தி […]

உக்ரைன்-ரஷ்யா போர் : சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்தும், உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதற்கிடையே சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவதாகவும், அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது குறித்து தெரிவித்த அவர், […]

நிர்க்கதியான விண்வெளி வீரர்களுக்காக ரஷ்யா அனுப்பிய அவசர மீட்புக் கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் திரும்புவதற்கான விண்கலம் சிறிய விண்கல் மோதல் காரணமாக சேதமடைந்துள்ளதால், ரஷ்யா அனுப்பிய அவசர மீட்பு விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. சோயுஸ் எம்எஸ்-23 எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், கஸகஸ்தானின் பய்கனூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலைய பங்காளரான அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதனை நேரடியாக ஒளிபரப்பியது. இவ்விண்கலம் நேற்றுஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. எனினும், சர்வதேச விண்வெளி நிலையத்திலுள்ள 3 வீரர்களும் பூமிக்குத் […]

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை வென்ற ரஷ்ய வீரர்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தோஹா நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, மெத்வதேவ் எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மெத்வதேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்கணக்கில் எளிதில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இது குறித்து மெத்வதேவ் தெரிவிக்கையில், ‘இன்றைய போட்டி மிகவும் கடினமான போட்டியாக […]