நெதர்லாந்துக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

Date:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகபஹர் ஜமான் – இமாம் களமிறங்கினர்.

3 பவுண்டரிகள் விளாசிய பஹர் ஜமான் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னிலும் இமாம் 15 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து ரிஸ்வான் – சவுத் சகில் ஜோடி சிறப்பான பாட்னர்ஷிப அமைத்தனர். ஒரு பக்கம் ரிஸ்வான் பொறுமையாக விளையாட மறுபக்கம் சவுத் சகில் அதிரடியாக விளையாடினார்.

சவுத் சகில் 32 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார்.அதனை தொடர்ந்து ரிஸ்வான் அரை சதம் விளாசினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய சவுத் சகில் 52 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ரிஸ்வானும் 68 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த இப்திகார் அகமது 9 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

188 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி திணறியது. அதனையடுத்து நாவாஸ் – சதாப்கான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சதாப்கான் 32 ரன்கள் எடுத்திருந்த போது போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடித்து வந்த ஹசன் அலி வந்த வேகத்தில் டக் அவுட் ஆனார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 286 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....