
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘டிஎன்ஏ’ படம் கடந்த மாதம் வெளியாகி சிறந்த விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது. நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படம் ஜூலை 17ம் தேதி தெலுங்கில் ‘My Baby’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாவது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேபோல் ஜூலை 19ம் தேதி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இதனால், தெலுங்கு மக்கள் திரையரங்கில் படம் பார்ப்பதை தவிர்த்து நேரடியாக ஓடிடியில் பார்க்கக்கூடும் என்றதால், படத்தின் தெலுங்கு வசூல் பாதிக்கப்படும் என்ற கவலையில் படக்குழுவினர் உள்ளனர்.





