# Tags
#இலங்கை

கொலையுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன் கைது

உணவக உரிமையாளர் ஒருவரை கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவர் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் 225 கிராம் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றினர்.

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அத்துகிரிய முல்லேகம பொதுச்சந்தை பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.