வாடகைக்குக் காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டம் – ஜப்பான் அரசாங்கத்தின் அதிரடி

Date:

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் தனியாக வாழும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், வாடகைக்குக் காதலர்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை ஜப்பான் அரசாங்கம் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.

ஜப்பானில் ஏராளமான இளைஞர்கள், இணை கிடைக்காமல் மனதளவில் சோர்வடைந்துள்ளதாகவும் இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதாவது ஒரு மணிநேரத்திற்கு 3,000 ரூபாய்க்குக் காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமாம். ஆனால், குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இணையைத் தேர்வு செய்யும் இணையதளத்திற்கு முன்பணமும் செலுத்த வேண்டுமாம்.

மேலும் உங்களுக்கான இணையை தேர்வு செய்யக் கூடுதலாக ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். வாடகைக்கு இருக்கும் இணையை நேரடியாக வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளக்கூடாது.

அதற்காகவே இருக்கும் செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டும்.

வாடகைக்கு எடுக்கும் நபர்களிடமிருந்து எவ்விதமான பரிசுப் பொருட்களையும் வாங்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கேள்விப்பட்ட இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...