# Tags

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து – இருவர் பலி!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், கொக்க பகுதியில் கார் ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் பின்னர் காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் கடுமையான பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தனர். எவ்வாறாயினும், குறித்த இருவரும் காரின் உள்ளேயே உயிரிழந்திருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் !

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை வந்தடைந்த சொகுசு கப்பல்

1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிச் வந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன் அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர். அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் […]

வெளிநாட்டவரின் 7 இலட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு!

கண்டியிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த நோர்வே நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் ஏழு இலட்ச ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விலை உயர்ந்த ‘ட்ரோன்’ கெமரா உட்பட பல பொருட்கள் கொண்ட பயணப் பொதியே இவ்வாறு இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ரயில் தரித்து நின்ற போது குறித்த பொதி திருடப்பட்டிருக்கலாம் என சுற்றுலாப் பயணி சந்தேகம் தெரிவித்துள்ளார். மேற்படி பயணப் பொதியில் 25 000 ரூபா பணம், […]