# Tags

பாடசாலை மாணவன் திடீர் மரணம்!

பாணந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை வடக்கில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நண்பர்கள் குழுவுடன் விளையாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பாடசாலை மாணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை இன்று […]

18 வயதான யுவதி மூவரால் பாலியல் துஷ்பிரயோகம்

பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 18 வயது யுவதியை வீட்டுக்கு கூட்டிச்சென்று விடுவதாக கூறி லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கூட்டுப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காகவும் லொறியின் உரிமையாளரும் அதற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 3 ஆம் திகதி இரவு பாணந்துறை நகரில் […]

லொறியில் யுவதி துஷ்பிரயோகம் !

வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு 18 வயதுடைய யுவதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் லொறியில் இருந்த சந்தேகநபர்கள் குறித்த யுவதியை பலமுறை துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி உட்பட மற்றுமொருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பாதிக்கப்பட்ட யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறையில் கடையொன்றில் பணிபுரியும் யுவதி வேலை முடிந்து இரவு வீட்டுக்குச் […]

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தகவல்

பாணந்துறை – பின்வத்தை பொது மயானத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்க் கொல்லப்பட்டவர் கடவத்தையைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வாகனத்தில் காலி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது உயிரிழந்தவர் கடவத்தை, கிரில்லவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சம்பத் குடகொட என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கடவத்தை நகரில் […]