# Tags

ஶ்ரீ ரங்கா கைது !

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு !

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மரண விசாரணை அதிகாரியின் வருகைக்காக சடலம் தற்போதும் அதே […]

உலக நீர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான சுவரொட்டிப் போட்டி

உலக நீர் தினம் 2023 ஐ முன்னிறுத்தி பாடசாலை மாணவர்களிடையேயான சுவரொட்டிப் போட்டியொன்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நடாத்தப்படவுள்ளது. இவ்வருட உலக நீர் தின கருப்பொருளான ‘நீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துவதாகும்’ (Accelerating change to solve the water and sanitation crisis)  எனவே இக் கருப்பொருளுக்கு அமைவாக ஆக்கங்களை மாணவர்கள் தயாரிக்க வேண்டும். குறித்த போட்டியில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மற்றும் வட […]

வவுனியாவில் பஸ் துவிச்சக்கரவண்டி மீது மோதியதில் குடும்பஸ்தர் பலி

வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தபோது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று துவிச்சக்கர வண்டியின் மீது மோதியுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக […]