# Tags

விளாடிமிர் புட்டினை கைது செய்ய பிடியாணை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜனாதிபதி புடின் மீது போர்க்குற்றம் சுமத்தியுள்ளது. குற்றச்சாட்டில் ஒன்று உக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியது.

பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன்

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஓய்வு பெற்றதன் பின்னர், தேஷபந்து தென்னகோன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எதிர்வரும் 25 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிராக போராட்ட வழக்கு – மே 8 ஆம் திகதிக்கு தவணை

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை மே மாதம் 8 ஆம் திகதி தவணையிட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்று (28) இடம்பெற்றது. இதன்போது வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர், பல்கலைக்கழக மாணவர் ஆகியோர் ஆஐராகியிருந்தனர். மேலும் சில சந்தேக […]

நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு?

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனையை சமூக பாதுகாப்பு பங்களிப்பில் இருந்து விடுவித்த பின்னர், விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவுக்கு மேல் ஒரு […]

மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம்- விசேட குழு நியமனம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம் அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபித்தல்

அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்கள் இளைப்பாறிய காலத்தில் அனுகூலங்களுடன் கூடிய ஓய்வூதியத்தை வழங்குவதற்கும், இளைப்பாறிய ஊழியர்கள் நாட்டுக்கு சுமையின்றி தமது ஓய்வு காலத்தைக் கழிப்பதற்கும் பொருத்தமான சூழலை உறுதிப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் எனும் பெயரிலான நிதியத்தைத் தாபிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச ஊழியர் ஒருவர் அரச சேவையில் இணைந்துகொண்ட பின்னர் அவருடைய அடிப்படைச் சம்பளத்தின் 8% வீதமும், தொழில் வழங்குநரின் பங்களிப்பாக 12% வீதமும் மாதாந்தம் உத்தேச நிதியத்திற்கு […]